1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 ஜூலை 2021 (08:59 IST)

ஹேப்பி பர்த்டே தல!; உலக அளவில் ட்ரெண்டாகும் தல தோனியின் பிறந்தநாள்!

ஹேப்பி பர்த்டே தல!; உலக அளவில் ட்ரெண்டாகும் தல தோனியின் பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளான இன்று பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில் தோனி குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகவும் புகழ்பெற்றவர். ரசிகர்களால் தல தோனி என செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி தற்போது இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடி வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரது 40வது பிறந்தநாளை சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து வாழ்த்து பதிவிட்டுள்ள சுரேஷ் ரெய்னா “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. நீங்கள் எனக்கு ஒரு நண்பராகவும், சகோதரராகவும் ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களிடம் எப்போது எதுவேண்டுமானாலும் கேட்கலாம். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுள் வழங்கவேண்டும். நீங்கள் ஒரு சிறந்த வீரராகவும், தலைவராகவும் இருந்ததற்கு நன்றி. ஹேப்பி பர்த் டே தோனி” என கூறியுள்ளார்.

அதை தொடர்ந்து ரசிகர்களும் ட்விட்டரில் #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேகை பெரிதும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.