திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (16:38 IST)

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்: ஐசிசி ஆலோசனை!

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்: ஐசிசி ஆலோசனை!

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்திர கூட்டம் லண்டனில் இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருபது ஓவர் போட்டிகளில் டிஆர்எஸ் முறைய கொண்டு வருவது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


 
 
மேலும் கால்பந்து, ஹாக்கி போன்ற போட்டிகளில் மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரருக்கு சிகப்பு அட்டை காட்டி வெளியேற்றுவது போல கிரிக்கெட்டிலும் நடுவரே வீரரை வெளியேற்றும் முறையை கொண்டு வர விவாதித்துள்ளனர்.
 
குறிப்பாக கிரிக்கெட் போட்டிக்கு மேலும் அங்கீகாரம் கிடைக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டிகளில் கிரிகெட்டை சேர்ப்பதற்கான பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் டிராவிட், டோரென் லீமன், பொல்லாக் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர்.