ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (21:36 IST)

தோனி மீது வழக்குப் பதிவு...ரசிகர்கள் அதிர்ச்சி

காசோலை  மோசடி புகார் காரணமாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் ஒரு நாள் மற்றும் டி-20,  டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் கோப்பை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

இவர் சுமார் 331 சர்வதேச போட்டிகளில் விளையாடி, அதில், 178 போட்டிகளில்  இந்திய அணிக்கு வெற்றிக் கேப்டனாகச் செயல்பட்டார்.

இவர் விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில்,நியூ குளோபல் நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தோனி உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் மா நிலம் பெகுசராய் சிஜேஎம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த நிலைய்ல், மேல் விசாரணையை மாஜிஸ்திரேட் அஜய்குமார் மிஸ்ராவுக்கு அனுப்பியது. எனவே, அடுத்த விசாரணையை ஜூன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.