1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2025 (07:43 IST)

மருத்துவர் சொன்னால்தான் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியும்.. அதிர்ச்சி தகவல்!

மருத்துவர் சொன்னால்தான் பும்ரா சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாட முடியும்.. அதிர்ச்சி தகவல்!
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நட்சத்திர பவுலர் பும்ரா காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பும்ராவை சோதித்து அவர் விளையாடலாம் என்று சொன்னால் மட்டுமே இந்த தொடரில் அவர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

ஒருவேளை பும்ரா களமிறங்காத பட்சத்தில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. பும்ரா தன்னுடைய தனித்துவமான பவுலிங் ஸ்டைல் காரணமாக அடிக்கடி காயமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.