டோனி மச்சான் என ட்வீட் செய்த பிரோவோ; ரசிகர்கள் மகிழ்ச்சி


Abimukatheesh| Last Updated: சனி, 24 ஜூன் 2017 (15:07 IST)
டிவைன் பிராவோ தனது ட்விட்டர் பக்கத்தில் டோனி மச்சான் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார். 

 

 
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்து அடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி நடைப்பெற்றது. மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது.
 
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் இந்திய வீரர்களுக்கு ஐபிஎல் போட்டி போட்டி மூலம் நல்ல நட்பு ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவைன் பிராவோ டோனியை பார்த்து குஷியாகிவிட்டார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், டோனி மச்சானை சந்தித்தில் மகிழ்ச்சி, இரு அணிகளுக்கும் வாழ்த்துக்கள் என ட்வீட் செய்துள்ளார்.


 

 
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது பிராவோ செய்திதான் ட்விட்டரில் கலக்கி வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :