வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (19:07 IST)

உலக கோப்பைக்கான உணவுப்பட்டியலில் இடம்பெறா பீப்

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளுக்கும் வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்போது உலகக்கோப்பைகான இந்திய அணி வீரர்கள் குழுவை பிசிசிஐ அறிவித்தது.

இந்த உலகக் கோப்பை தொடருக்காக  பல அணிகள் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள 9 அணிகளுக்கும் வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெறவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

மாட்டிறைச்சிக்கு பதிலாக ஆட்டிறைச்சி கோழி மீன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.