திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (19:19 IST)

ஆசியக்கோப்பை: திணறும் வங்கதேசம், அசத்தும் ஜடேஜா

இந்தியாவுக்கு எதிரான ஆசியக்கோப்பை சூப்பர் 4 பிரிவின் முதல் போட்டியில் இந்தியப் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.


துபாயில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியாவும் வங்கதேச அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் 29 ஓவர்கள் முடிந்த நிலையில் தற்போது அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் முஷ்புகீர் ரஹிம் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த்தார். தற்போது மகமதுல்லாவும் மொசாடக் ஹுசேனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இந்திய தரப்பில் ரவீந்தர ஜடேஜா சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா  குரூப் ஏ பிரிவில் ஹாங்காங்க் மற்றும் பாகிஸ்தானை வென்று சூப்பர் 4 பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. வக்கதேச அணி குரூப் பி பிரிவில் இலங்கையிடம் வெற்றியும் ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியும் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.