1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (21:19 IST)

எல்.பி.டபிள்யூ அவுட் தராததால் ஸ்டெம்பை உடைத்த பவுலர்!

எல்.பி.டபிள்யூ அவுட் தராததால் ஸ்டெம்பை உடைத்த பவுலர்!
கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடுவர் எல்பிடபிள்யூ அவுட் தராத ஆத்திரமடைந்த பந்துவீச்சாளர் ஒருவர் ஸ்டெம்ப்பை உடைத்த்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
தாகா லீக் கிரிகெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வங்கதேச வீரர் சாகிப் அல் ஹஸன் என்பவர் பந்து வீசிய போது எல்பிடபிள்யூ அவுட் கேட்டார். ஆனால் நடுவர் அவுட் தரவில்லை 
 
இதனால் ஆத்திரமடைந்த  சாகிப் அல் ஹஸன் ஸ்டெம்ப்பை எட்டி உதைத்தார். மேலும் அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட  சாகிப் அல் ஹஸன், ஒரு கட்டத்தில் ஸ்டெம்பை பிடிங்கி எறிந்தார். இதன் பின்னர் போட்டி சில நேரம் தடைபட்டது.
 
இந்த நிலையில்  சாகிப் அல் ஹஸன்தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குரல் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது