வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (11:33 IST)

இரட்டை குழந்தைகளோடு ஒர்க் அவுட் செய்யும் நடிகர் பரத் - வீடியோ!

ஷங்கர் இயக்கத்தில்  2003ல் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பரத். அதை தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’ உட்பட பல நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் 2013ல் ஜெஷ்லி என்ற பல் மருத்துவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அவ்வப்போது குழந்தைகளுடன் நேர்காணல், வீடியோ என ரசிகர்களுக்கு காட்டுவார். 
 
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தன் இரட்டை மகன்களுடன் சேர்ந்து ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.