1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 28 மே 2016 (19:04 IST)

விராட் கோலி, வார்னர் நாளை மோதல்: ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்?

9-வது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் நாளை விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதுகின்றன.


 
 
8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் கடந்த 22-ஆம் தேதியுடன் முடிந்தன. லீக் போட்டிக்கு பின்னர் முதல் நான்கு இடங்களை பிடித்த குஜராத் லயன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
 
பிளே ஆப் சுற்றில் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூர் அணி குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்திய ஐதராபாத் அணி இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
 
இறுதிப் போட்டியில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், வார்னரின் ஐதராபாத் அணியும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியட்தில் நாளை இரவு 8 மணிக்கு மோதுகின்றன. இரு அணிகளும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முனைப்பாக உள்ளது.