திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 28 அக்டோபர் 2023 (07:30 IST)

இங்கிலாந்த பாக்கவே சோகமாதான் இருக்கு… நக்கல் செய்த ஆஸி கேப்டன்!

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது.

பெங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸின் பதில் கவனத்தை ஈர்த்துள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இங்கிலாந்தின் மோசமான செயல்பாடு பற்றி கேட்ட போது “இங்கிலாந்தின் தொடர் தோல்விகளை பார்ப்பதற்கே சோகமாகதான் இருக்கிறது.” என சிரித்துக்கொண்டே பதிலளித்து நக்கல் செய்துள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.