1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 5 நவம்பர் 2022 (11:58 IST)

இலங்கையின் வெற்றிக்காக பிராத்திக்கும் ஆஸ்திரேலிய ரசிகர்கள்!

இன்று மதியம் சூப்பர் 12 லீக்கில் இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்று மதியம் சூப்பர் 12 லீக்கின் மிக முக்கியமான போட்டி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் 7 புள்ளிகள் பெறும். ஏற்கனவே 7 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும், இங்கிலாந்து அணியின் நெட் ரன்ரேட் அதிகம். அதனால் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணியே செல்லும்.

அதுவே இலங்கை அணி வெற்றி பெற்றால், ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு செல்லும். இதனால் ஆஸ்திரேலிய அணியும், அந்நாட்டு ரசிகர்களும் இந்த போட்டியின் முடிவுக்காக ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே குருப் ஏ பிரிவில் நியுசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.