திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (19:09 IST)

ஆஸ்திரேலியா இப்படி ஆடி பார்த்ததே இல்லை! சச்சின் ட்வீட்!

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா  இப்படி ஆடி தான் பார்த்ததே இல்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்!
 



இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 191 ரன்கள் குவித்துள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவிற்கு பெரும் நெறுக்கடி கொடுத்த ஆஸ்திரேலியா அணி, தற்போது இந்திய வீரர்களின் பந்துவீச்சில் திணறி வருகின்றது.
 
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டிக்குறித்து சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய அணி இப்போது தன் பிடியை நழுவ விடக்கூடாது. இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.  ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் தங்கள் சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு தற்காப்பு, தடுப்பு உத்தியுடன் ஆடி என் அனுபவத்தில் கண்டதில்லை.


 
குறிப்பாக அஸ்வின் தன் திறமையினை இப்போட்டியின் பந்துவீச்சின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இப்போதைக்கு இந்திய அணியின் கை ஓங்கியிருக்க அஸ்வின் தான் முக்கிய காரணம்." என குறிப்பிட்டுள்ளார்.