1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:58 IST)

ஆசிய கோப்பை: இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு..

srilanka -pakistan
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வரும் நிலையில், இதில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஏற்கனவே இந்தியாவை வீழ்த்தியுள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில்  ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

4 ஓவர்களில் 35 ரன் கள் அடித்து 1 இழந்து விளையாடி வருகிறது பாகிஸ்தான்.