தொடர்புடைய செய்திகள்
- ராஞ்சி டெஸ்ட்.. வெற்றியை நோக்கி இந்தியா அணி.. இன்றே ஆட்டம் முடிய வாய்ப்பு..!
- 8 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் இங்கிலாந்து.. எளிதில் வெற்றி பெறுமா இந்தியா?
- முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 134 ரன்கள் பின்னடைவு..!
- 6ஜி ஆராய்ச்சியில் NOKIA நிறுவனம்!
- தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள் ? தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்
இந்திய மைதானங்களில் அஸ்வின் படைத்த புதிய சாதனை!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பியது.

நேற்று இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் இந்திய மைதானங்களில் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவர் 352 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 350 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். நேற்று அஸ்வின் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளேவும் 35 முறை இதே சாதனையைப் படைத்துள்ளார்.