வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 12 ஜூன் 2017 (20:10 IST)

அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது அனில் கும்ளே செயல்பட்டு வருகிறார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
 
சேவாக் உள்பட பலரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அனில் கும்ளேவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினை நிர்வகிக்கும் உச்சநீதிமன்ற குழுவின் தலைவரான வினோத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் அளிக்கும் வகையில் அனில் கும்ளேவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடர் ஜூன் 23 முதல் ஜூலை 9 வரை நடைபெறுகிறது.