வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:17 IST)

உங்களுக்கு பூம்ரா என்றால்… எங்களுக்கு ஸ்டார்க் – அலெக்ஸ் கேரி கருத்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் போட்டி குறித்து அலெக்ஸ் கேரி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் பவுலிங் குறித்து ஆஸ்திரெலியா முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி ‘பும்ராவும் ஷமியும் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதே போல எங்கள் வேகப்பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. உங்களிடம் பூம்ரா , ஷமி என்றால் எங்களிடம் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் உள்ளனர். எங்களுடைய பலம் என்ன என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். உண்மையில் இது அற்புதமான தொடராக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.