செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 மே 2020 (11:13 IST)

கழுவி ஊற்றினாலும் கண்டுகொள்ளாத அப்ரிடி! – கடுப்பான இந்திய வீரர்கள்!

இந்தியா குறித்தும் பிரதமர் குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி பேசியதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அப்ரிடியின் தொண்டு நிறுவனத்திற்கு ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில வீரர்கள் நிதி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மனிதாபிமான அடிப்படையிலேயே நிதி அளித்ததாக ஹர்பஜன் உள்ளிட்டோர் விளக்கம் அளித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் அப்ரிடி இந்தியாவையும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங் “அப்ரிடி தனது அறக்கட்டளைக்காக உதவும்படி கேட்டுக்கொண்டார். மனிதாபிமான அடிப்படையிலேயே கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்காக உதவினோம். ஆனால் அந்த மனிதர் இப்போது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இனி அவரோடு எந்த ஒட்டும் உறவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

அதுபோலவே யுவராஜ்சிங், கௌதம் கம்பீர் உள்ளிட்டவர்களும் அப்ரிடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சாஹித் அப்ரிடி ”நான் எப்போது ஹர்பஜன் மற்றும் யுவராஜுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். அவர்கள் அந்த நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறு பேச அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.