செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 ஜூலை 2022 (18:32 IST)

கே.எல்.ராகுலின் காதலி வெளியிட்ட புகைப்படம்...இணையத்தில் வைரல்

kl rakul adhithya shetty
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வரும் அவரைப் பற்றிய கிசுகிசு வெளியாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேஸ்ட் மேனும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸன் கேப்டனுமான கே.எல். ராகுலுக்கும் பிரபல இந்தி நடிகை அதியா ஷெட்டியுடன் காதல் இருப்பதாக மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன. இதைப் பற்றிய கேள்விக்கும் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர்.

இந்த நிலையில் அதியா ஷெட்டியும்,  கே.எல் .ராகுலும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் கே.எல்.ராகுல் இதய எமோஜியை பதிவிட்டுள்ளார்.

இதற்கு சினிமா பிரபலனங்களும், விளையாட்டு நட்சத்திரங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்ய  உள்ளதாகக் கூறப்படுகிறது.