1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Vinothkumar
Last Modified: புதன், 10 ஜூலை 2024 (19:15 IST)

இந்திய் அணியில் கம்பீரின் முதல் டாஸ்க் இதுவாகதான் இருக்கும்… வெளியான தகவல்!

Ghambir
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக கடந்த சில மாதங்களாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகின. அதை உறுதிபடுத்தி பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்த மாத இறுதியில் இலங்கை செல்லும் அணியோடு கம்பீர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்பீர் அணிக்குள் வந்தததும் என்னென்ன மாற்றங்கள் நடக்க போகின்றன என்பதைக் காண இந்திய அணி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள தகவலின் படி கம்பீர் பொறுப்பேற்றதும் அவருடைய முதல் பணியாக இந்திய அணிக்கு அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனைக் கண்டடைவதாகதான் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ரோஹித் ஷர்மா அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனைக் கண்டடைவதுதான் கம்பீரின் முதல் பணியாக இருக்கும். அந்த பொறுப்புக்கு பும்ராதான் சரியான ஆளாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.