1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. வீரர்கள்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (07:20 IST)

மை ஏஞ்சல்ஸ்... மனைவியுடன் மகன் புகைப்படத்தை பகிர்ந்த பாண்டியா!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்ததே. இதையடுத்து இவர்களது திருமணம் ஓரிரு மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் தள்ளிப் போனது.

திருமணம் தள்ளிப் போனாலும் நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து கடந்த ஜூலை 30ம் தேதி ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

” என்னுடைய இரண்டு ஏஞ்சல்ஸை மிஸ் பண்றேன். என்னுடைய வாழ்க்கையில் உங்கள் இருவரையும் பெற நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். என கூறி மனைவி , மகனுடன்  வீடியோ காலில் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Missing my 2 angels