1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. வீரர்கள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 13 மே 2017 (19:50 IST)

இன்றைய ஆட்டத்தோடு கலையும் குஜராத் லயன்ஸ்; ரெய்னா வெளியிட்ட உருக்கமான விடியோ

இன்றைய கடைசி ஆட்டத்தோடு குஜராத் லயன்ஸ் அணி கலைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டி ஆரம்பமாகும் முன் அணியின் கேப்டன் ரெய்னா ரசிகர்களுக்கு நன்று கூறி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளதால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணி கலைக்கப்படும். 
 
இன்று குஜராத் அணி இந்த ஆண்டின் கடைசி போட்டி. இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா போட்டி ஆரம்பமாகும் முன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.