இவர் யாரென்று தெரிகிறதா?


Murugan| Last Modified சனி, 16 ஜூலை 2016 (14:41 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, தாடியுடன் தனது மகளை மடியில் வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் அவரது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றுள்ளது.

 

 
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ யாரென்று கண்டுபிடியுங்கள்” என்ற தலைப்பில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இவர் தன் பெண் குழந்தைக்கு ஜிவா என்று பெயரிட்டுள்ளார்.
 
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு, தோனி தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்து வருகிறார். வருகிற அக்டோபர் மாதம் நியுசிலாந்திற்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாட உள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :