டோனியின் அடுத்த கெட்அப்......டாடி வித் தாடி.........

டோனியின் அடுத்த கெட்அப்......டாடி வித் தாடி.........

Sugapriya| Last Updated: சனி, 16 ஜூலை 2016 (16:39 IST)
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தனது மகளுடன் எடுத்துள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு தற்போது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் அக்டோபரில் இந்தியாவில், நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடர் வரை டோனி சுதந்திர பறவை தான். இதனால் குடும்பத்தோடு குதுகலித்து வருகிறார்.

தனது மகள் ஜிவாவுடன் டோனி போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டு வருகிறார். தற்போது வெளியாகியுள்ள புதிய படத்தில், டோனி நீண்ட தாடியுடன், மகளை மடியில் வைத்துள்ளார். இந்த வித்தியாசமான போட்டோ ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

இது பொய்யான தாடி என்பதை படத்தை பார்த்ததுமே தெரிந்து இருக்குமே!!!


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :