1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கொரோனா வைரஸ்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (11:20 IST)

கொரோனா 3-வது அலை தொடக்கம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கொரோனா 3-வது அலை தொடக்கம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவத்துவங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து முதல் அலை இரண்டாம் அலை என உலகம் முழுக்க உள்ள கோடிக்கணக்கான மக்களை வாட்டி வதைத்தது. இதிலிருந்து எப்போது விடுபெறுவோம் என மிகுந்த துயரத்தில் இருக்கும் மக்களுக்கு மீண்டும் ஆபத்தான எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார நிறுவனம். 
 
ஆம், இரண்டாம் அலை ஓய்வதற்குள் மூன்றாம் அலை உருவெடுத்துள்ளது. உலகம் கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம் தெரிவித்து மக்களை எச்சரிக்கையுடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளார்.