1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Suriya bollywood debut movie confirmed

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

Rakeysh Omprakash Mehra
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் அவர் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையில் சூர்யா, பாலிவுட்  இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. மகாபாரத கதையை மையப்படுத்தி உருவாகும் கர்ணா என்ற இந்த படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  மிகப்பிரம்மாண்டமாக பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இந்த தகவல் உறுதிப்படுத்தப் படாததாக இருந்த நிலையில் இப்போது அதை இயக்குனர் ராகேஷ் மெஹ்ரா உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “என்னுடைய அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!