1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 25 செப்டம்பர் 2021 (14:09 IST)

மை டியர் கிங்.... மகனை அறிமுகப்படுத்திய சாண்டி!

மை டியர் கிங்.... மகனை அறிமுகப்படுத்திய சாண்டி!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
மை டியர் கிங்.... மகனை அறிமுகப்படுத்திய சாண்டி!
 
அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். இரண்டாவதாக ஷான் மைக்கேல் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில் மகனின் கியூட்டான போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மை டியர் கிங் என மகனை முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.