செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (13:25 IST)

புது ஸ்டைலில் பூஜா ஹெக்டே - அட்டகாசமான போட்டோஸ்!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
 
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். 
 
மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
 
அதன் பின் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கு ரசிகர்கள் அவருக்கு கை கொடுத்து தொடர் ஹிட் அடிக்க செய்தனர். 
அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் டாப் நடிகையானார். அதன் பின்னர் மீண்டும் தமிழ், இந்தியில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.