திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By vinoth
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (16:22 IST)

கிடுகிடுவென உயரும் நடிகை இவானா… எல்லாம் லவ் டுடே ரியாக்‌ஷன்!

நாச்சியார் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவானா சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக மடங்கு லாபத்தைப் பெற்றுத்தந்த படமாக லவ் டுடே அமைந்துள்ளது. இதனால் அந்த படத்தின் நாயகன் பிரதீப் மற்றும் நாயகி இவானா ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் கவனம் கிடைத்துள்ளது.

அதனால் இப்போது இவானாவாவின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து ஹரிஷ் கல்யாணோடு நடிக்கும் படத்துக்கு அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.