1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்ப காலத்தில் உணவில் கால்சியம் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏன்...?

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பிறக்காத குழந்தைக்குமான அக்கறையே. 

கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியம்.
 
பால் பொருட்கள், முக்கியமாக பால், புரதங்கள், வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றையும் கொண்டிருப்பதோடு சுண்ணாம்புச் சத்தும் அதிகம் நிறைந்த உணவுப்  பொருளாக திகழ்கிறது.
 
உலர்ந்த அத்திப்பழம்: ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 mg கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின் ஆரோகியத்திற்கு நல்லது. 
 
பேரிச்சை: பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது. 
 
மல்பெரி பழம்: கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.