1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
  4. During pregnancy; What are the foods to eat...?

கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் என்ன...?

கர்ப்ப காலம்
உணவில் பச்சைக்காய் கறிகள், பழங்கள், அதிகம் இருக்க வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உன்னவேண்டும். கர்ப்பகாலத்தில் வாந்தி வரும் இதனால் சாப்பிடமால் இருக்ககூடாது. பல வேளை களாக பிரித்து சாப்பிடலாம். ஜூஸ் அதிகம் குடிக்கலாம்.
கர்ப்பிணிகள் வயிறு எப்போதும் காலியாக இருக்க கூடாது. உடல் சோர்வாக இருக்கும் போது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். குமட்டுதல் வரும் போது எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால், குமட்டுதல் குறையும்.
 
இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பேரிச்சை, மாதுளை, கீரை வகைகள், முருங்கைக் கீரை சாப்பிடலாம்.
 
வெல்லம் சேர்த்த உணவு வகைகளை உண்ணலாம். காபி, டீயை தவிர்த்து பாலுடன் வேறு ஏதாவது கலந்து சாப்பிடலாம். உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.
 
காலையில் பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும். மாதுளை பழம் சாப்பிடலாம். குங்குமபூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தவறான கருத்தாகும். மனிதன் உடலில் நிறங்களை நிர்ணயிப்பது மெலனின் எனப்படும் நிறமிகளே ஆகும்.
 
கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுவதால் உடல் லேசாக கருத்து காணப்படும். இது பிறகு மாறிவிடும். இதனால் குழந்தை  கருப்பாக பிறக்கும் என்பது தவறு.
 
கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும் ,அடிக்கடி மயக்கம் வராது. கர்ப்பிணிகள் தினம் ஒரு வாழை பழம் சேர்த்து கொள்ளலாம். இது உடல் சூட்டை தணிக்கும், மலசிக்கல் வராமால் தடுக்கிறது.
 
குழந்தை வளர வளர வயிற்று குடல் ஒரு பக்கம் தள்ளும் இதனால் அதிகம் சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள், போன்றவற்றை பல வேலைகளாக பிரித்து சாப்பிட வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
மிளகை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்கள்...!!