செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

கர்ப்ப காலத்தில் எலும்புகளை வலுப்பெறச்செய்யும் உணவுகள் என்ன தெரியுமா...?

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம்  அவசியம்.

கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.
 
ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின்  ஆரோகியத்திற்கு நல்லது.
 
ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின்  ஆரோகியத்திற்கு நல்லது.
 
பேரிச்சம் பழத்தில் கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். 
 
இலந்தைப் பழம் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
 
அதிக அளவிலான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது கிவி பழம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது.