1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.கேஸ்டன்
Written By அ.கேஸ்டன்
Last Updated : திங்கள், 27 ஜூன் 2016 (17:36 IST)

சுவாதியின் ஆன்மா ரயில் நிலையத்தை சுற்றி வருகிறது: உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல

தமிழகத்தின் தற்போதையை பேசும் பொருளாகிவிட்டார் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி. கடந்த 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் மர்ம நபரால் அரிவாளால் கழுத்தில் வெட்டப்பட்டு துடிதுடிக்க காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில் பரிதாபமாக இறந்தாள் அந்த இளம்பெண்.


 
 
25 வயதில் உலகில் சாதாரண மனிதனுக்கு இருக்கும் அத்தனை கனவுகளுடன், ஆசைகளுடனும் வாழ்ந்து வந்த சுவாதியை மர்ம மனிதனுடன் இணைந்து மனமில்லாத சில மனிதர்களும் சேர்ந்து தான் கொன்றார்கள்.
 
சுவாதியை கொன்றது அந்த மர்ம மனிதனாக இருந்தாலும் கண்டிப்பாக அவள் மனம் நொந்து இறந்தது மக்களே உங்களால் தான். தன்னுடைய உயிர் பிரியும் போது தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க யாராவது முன்வர மாட்டார்களா என கண்டிப்பாக சுவாதியின் மனம் எண்ணியிருக்கும்.
 
என்னை காப்பாற்றுங்கள், என் வீட்டுக்கு தகவல் சொல்லுங்கள் என மனதில் சொல்கிறேன், ஆனால் அந்த பாதகன் செய்த செயலால் என குரவளையில் சத்தம் வர மாட்டேங்குது. என உயிர் பிச்சை கேட்ட சுவாதியின் மனக்குரல் உங்கள் மனதை துளைக்காமலா இருந்தது.
 
யார் செத்தால் எனக்கென்ன, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு, உனக்கு உதவ போய் கொலை பழியை நான் சுமக்க நேர்ந்தால் என நினைத்தாயா மானிடனே? நாளை உனக்கும் இப்படி நேரலாம் என்பதை மறந்து விடாதே. எல்லோருக்குள்ளும் ஒரு ஆர்வம் இருக்கும் உதவனும், காப்பாற்றனும், வீரதீர செயல் புரியனும் என்று ஆனால் அத்தனை பேரும் சும்மா இருக்கும் போது நமக்கு எதுக்கு வீண்வம்பு, யாராவது ஆரம்பித்தால் நான் உதவ முன் வருவேன் என்பது தான் பலருடைய எண்ணமாக இருக்கும்.
யார் வருவார் என காத்திருக்காமல் நீ ஏன் அதை ஆரம்பிக்க கூடாது என ஒரு முறை உன்னை நீயே கேட்டுப்பார், இது போன்ற பல சுவாதிகளை நீ காப்பாற்றலாம். பல தந்தைகள், அம்மாக்கள், தம்பிகள், அண்ணன்கள் உனக்கு கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள்.
 
6:30 மணிக்கு வதம் செய்யப்பட்ட சுவாதியின் உடல் 8:30 மணிக்கு தான் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. 2 மணி நேரம் காட்சி பொருளாக இருந்த என்னை காப்பாற்ற ஒருவர் கூட முன்வரவில்லையே என சுவாதியின் ஆன்மா ரயில் நிலையத்தை சுற்றி வருகிறது அந்த மனிதாபிமானிகளை பார்த்து வாழ்த்துக்கள் சொல்ல, நாளை உங்களுக்கும் இப்படி நடக்கலாம் என்று.