புதிய வருமான வரி முறை அமல்
புதிய வருமான வரி, சரக்கு-சேவை வரியை அடுத்த நிதி ஆண்டு முதல் அமல்படுத்த அரசு எண்ணியுள்ளதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
டைரக்ட் டாக்ஸ் கோட் [Direct Taxes Code (DTC)] என்றழைக்கப்படும் புதிய வருமான வரி விதிப்பால், மாத ஊதியம் பெறுபவர்கள் உட்பட வருமான வரி செலுத்துபவர்களில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது வருமான வரி விலக்கு சலுகைகள் நீக்கப்படும். இது பெண்கள், மூத்த குடிமக்களை பாதிக்கும்.
எனவே இதை உடனே அமல்படுத்தக் கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உட்பட எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பட்ஜெட் சமர்பித்து பேசிய பிரணாப் முகர்ஜி, 2011ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் புதிய வருமான வரியை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
நேரடி, மறைமுக வரி விதிப்பு முறையை சீர்திருத்த, புதிய வருமான வரியும், விரைவில் சரக்கு-சேவை வரியை அமல்படுத்த அரசு எண்ணியுள்ளது என்று கூறினார்.
தற்போதுள்ள மதிப்பு கூட்டு வரி, உற்பத்தி வரி, செஸ், சர்சார்ஜ், மாநில அரசுகளின் விற்பனை வரி போன்றவைகள் ஒன்றிணைக்கப்பட்டு, சரக்கு-சேவை வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதனை அமல்படுத்த மேற்குவங்க நிதி அமைச்சர் அஜிம்தாஸ் குப்தா தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சரக்கு-சேவை வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவதற்கும், வரி வருவாயை பகிர்ந்து கொள்வது, மாநில அரசுக்கு உள்ள வரி விதிக்கும் அதிகாரம் ஆகியவைகளில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.