1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பட்ஜெட்- 2017-18
Written By கேஸ்டன், லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2017 (16:11 IST)

மத்திய பட்ஜெட் 2017-18: முழுத் தகவல்கள்

2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதனை உடனுக்குடன் அறிந்துகொள்ள வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.

* தனிநபர் ஒருவர் அரசியல் கட்சிக்கு அதிகப்பட்சமாக ரூ. 2000 மட்டுமே பணம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட முடியும். அதற்கு மேல், கட்சிகளுக்கு காசோலை, மின்னணு பரிமாற்றம் மூலமே இனி நன்கொடை அளிக்க முடியும்.

* சிட் பண்ட் மோசடிகளை தடுக்கப் புதிய சட்டம்.

* ஆதி திராவிட மக்களுக்கு கூடுதலான நிதி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

* ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி குறைப்பு.  ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி அதிகரிப்பு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

* வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை.

* ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதியில் நிலம் வைத்திருப்பவர்கள் மூலதன ஆதாயங்களுக்கான விதிவிலக்கு கிடைக்கும்.

* 3 லட்சத்திற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது.

* இயற்கை எரிவாயு இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைப்பு
 
* 2-ஆம் நிலை நகரங்களில் உள்ள குறிப்பிட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை
 
* அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை

* 10 லட்சத்திற்கும் மேலாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 24 லட்சம் பேர்.

* அதிகப்படியான மக்கள் வரி செலுத்துவதில்லை.

* பெருமளவிற்கு வரி அல்லாத இணக்கமான சமுதாயமாக இருக்கிறோம்.

* சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம் வகுக்கப்படும்
 
* ஆண்டு வர்த்தகம் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதமாக குறைப்பு
 
* கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க ரூ.9000 கோடி ஒதுக்கீடு
 
* மலிவு விலை வீடுகளுக்கு சலுகைகள் பெறுவதற்கு உள்ள விதிமுறைகளில் தளர்வு
 
* பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு முன்னரே வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 34.8 சதவீதம் அதிகரித்துள்ளது

* மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதார நிதியாக ரூ.4.11 லட்சம் கோடி அளிக்கப்பட்டுள்ளது
 
* ரூ.5 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் காட்டும் 76 லட்சம் பேரில் 56 லட்சம் பேர் மாத ஊதியம் பெறுவோர்
 
* ஆதார் அட்டை அடிப்படையில் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம்
 
* அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.37435 கோடியாக அதிகரிப்பு
 
* நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்
 
* காச நோயை 2025-ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 
* முறையாக வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது
 
* 1.48 லட்சம் வங்கிக் கணக்குகளில் 80 லட்சத்திற்கும் அதிகமான பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
 
* 7000 ரயில்களில் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தப்படும்

* ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 27411 கோடி
 
* மொத்த பட்ஜெட் செலவுத் தொகை ரூ.2147000 கோடி
 
* இந்தியாவில் கடன்பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டவிதிகள் உருவாக்கப்படும்
 
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை கண்காணிக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்

* வங்கி மூலதனமாக்குதலுக்கு ரூ 10,000 கோடி ஒதுக்கீடு: அருண் ஜெட்லி

* இந்தியா பிரமாண்டமான டிஜிட்டல் புரட்சியின் உச்சத்தில் உள்ளது. இது டிஜிட்டல் தளத்திற்கு பெருத்த நன்மைகளை நோக்கிய நகர்வை உண்டு பண்ணும்.

* அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தில் 3.5 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்
 
* மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்
 
* மின்னணு முறை பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க திட்டங்கள் வகுக்கப்படும்
 
* உர விற்பனை நிலையங்கள், கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு முயற்சி
 
* ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
 
* வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் 5 லட்சம் குளங்கள் ஏற்படுத்தப்படும்
 
* பெண்களுக்கான முத்ரா திட்டத்தில் சிறு கடன்களுக்காக ரூ.240000 கோடி ஒதுக்கீடு
 
* ரயில்வேயின் ஐஆர்சிடிசி பங்குச் சந்தையில் இடம்பெறும்
 
* வங்கிகளில் சட்டவிரோத முதலீடுகளை தவிர்க்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும்

* உயர்கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்: அருண் ஜெட்லி

* இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் திறந்து விடும் வகையில் புதிய மெட்ரோ ரயில் கொள்கைகள் அறிவிக்கப்படும்.

* அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இரத்து செய்யப்படும்.

*  விமான நிலையங்களின் தரம் உயர்த்த, நிலங்கள் மற்றும் நிதிகளை பயன்படுத்த ஆவண செய்யும் வகையில், விமான நிலையங்கள் அதிகாரம் சட்டம் திருத்தம் செய்யப்படும்.

* ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளுக்கு சேவை வரி ரத்துசெய்யப்படும்
 
* பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்
 
* புனித பயணம், சுற்றுலா செல்பவரகளுக்கு தனியாக ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்
 
* 2019-ஆம் ஆண்டிற்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ-டாய்லெட் வசதி உருவாக்கப்படும்.
 
* வரும் நிதியாண்டில் சிறப்பாக செயல்படும் 25 ரயில் நிலையங்களுக்கு விருது அளிக்கப்படும்
 
* 500 ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு வசதிகள் ஏற்படுத்தப்படும்
 
* போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 2.41 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
 
* பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
 
* புதிதாக இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புதிய மருத்துவத் திட்டங்கள் குறித்து அருண் ஜெட்லி

* உடல்நலப் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மேலும் 25 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்படும்.

* மருத்துவ சாதனங்கள் பற்றி புதிய விதிகள் முறைப்படுத்த உள்ளது.

* மருத்துவத் துறையில் புதிய முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் செயல்படுத்தப்படும்.

* மருத்துவ உபகரணங்களின் விலை விலை குறைக்கப்படும்.

* ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர்களை இலக்காக கொண்ட மருத்துவக் கொள்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்கும்.

* உயிர் காக்கும் மருந்துகள் விலை குறைக்கப்படும்.

* குஜராத் மற்றும் ஜார்கண்டில் புதிய 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

* மூத்தக் குடிமக்களுக்கு ஆதார் அட்டை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

* மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்
 
* தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
 
* 9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்
 
* 3500 கி.மீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்
 
* அகல ரயில் பாதை தடங்களில் வரும் 2020-ஆம் ஆண்டிற்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங் இல்லாத நிலை உருவாக்கப்படும்
 
* இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி கொண்ட ரயில்வே பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்

* திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களுக்கு, பைப் வழியாக தண்ணீர் அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்
 
* கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைக்கப்படும்.
 
* குஜராத் மற்றும் ஜார்கண்டில் புதிதாக எயிம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
 
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திட்டங்களுக்காக ரூ.184000 கோடி நிதி ஒதுக்கீடு.
 
* 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதியில் இந்தியாவில் உள்ள 100 சதவீத கிராமப்புறங்கள் மின்சார வசதியை பெற்றுவிடும்

* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 5 ஆண்டில் இரண்டு மடங்காக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி

* ஐந்து சிறப்பு சுற்றுலா மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன. இது ஜவுளி, தோல் மற்றும் காலணி துறைகளில் வேலை திட்டங்களை உருவாக்குவதாக இருக்கும்.

* நாட்டில் 2019-ஆம் ஆண்டுக்குள் 50000 பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுமையாக நீக்கப்படும்.
 
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மகளிர் பங்களிப்பு 55% உயர்வு
 
* வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் வழங்கப்படும்
 
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.48000 கோடி ஒதுக்கீடு
 
* அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019-ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்
 
* கிராமப்புற பெண்களில் திறன் மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு
 
* தீன் தயாள் யோஜன திட்டத்திற்கு ரூ.4500 கோடி ஒதுக்கீடு
 
* கிராமப்புறம் மற்றும் விவசாயம் தொடர்பான துறைகளுக்கு 2017-18 நிதியாண்டில் மொத்தம் 187233 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
 
* புதிய கண்டுபிடிப்புகளுக்காக மாணவர்களை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்


* கிராமப்புற வளர்ச்சிக்கும், பழங்குடியினர்களின் வளர்ச்சிக்கும், உள்கட்டுமானத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த 5 ஆண்டில் இரண்டு மடங்காக்க நடவடிக்கை: அருண் ஜெட்லி

* நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.


* வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதலீடுகள் 2016-ஆம் ஆண்டில் 36 சதவீதமாக அதிகரிப்பு
 
* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு வங்கியின் கீழ் ரூ.8000 கோடி ஒதுக்கீடு
 
* விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக, குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்

* நாட்டின் பணவீக்க விகிதம் கட்டுப்பாட்டில் இருந்தது.

* உற்பத்திப் பொருட்களின் விலை, கச்சா எண்ணெய் ஆகியவற்றில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகள் இரண்டாவது பெரிய சவாலாக உள்ளது.

* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13000 கோடி ( கடந்த ஆண்டு ரூ.5500 கோடி)

* வரும் நிதியாண்டில் விவசாயம் 4.1 சதவீதமாக வளர்ச்சியடையும்
 
* விவசாய கடனாக 10 லட்சம் கோடி வழங்க இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)
 
* நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது

* செல்லாத நோட்டு அறிவிப்பு அதிகமான வரி வருவாய்க்கு வழிவகுக்கும். வங்கிகளுக்கான வட்டி வீதங்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே குறைந்துள்ளதே இதற்கு ஆதாரம் - அருண் ஜெட்லி.

* ஜன்தன், ஆதார் மொபைல் (J.A.M) அடிப்படையிலான பரிவர்த்தனையிலேயே இருக்கும்
 
* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18 காலகட்டத்தில் 7.7 சதவீதமாக அதிகரிக்கும்
 
* 2017-ஆம் ஆண்டு உலக பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதத்திலிருந்து 3.4 சதவீதமாக உயரும் என ஐ.எம்.எஃப் அமைப்பு கணித்துள்ளது

* பல தசாப்தங்களாக வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு எதிராக செல்லாத நோட்டு அறிவிப்பு என்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வரும் வருவாய் எதிர்கால திட்டங்களை செயல்படுத்த உதவும் - அருண் ஜெட்லி

* வளர்ச்சியின் பலன்கள் அனைவரும் அடைவதை உறுதி செய்ய, நாம் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் -- அருண் ஜெட்லி

* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: அருண் ஜெட்லி
 
* பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி: அருண் ஜெட்லி
 
* வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது: அருண் ஜெட்லி
 
* இளைஞர் நலன் வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது: ஆருண் ஜெட்லி
 
* உலகின் 6-வது மிகப்பெரிய உற்பத்தி நடாக இந்தியா உள்ளது: அருண் ஜெட்லி


* கருப்புப் பணத்தை ஒழிக்க மகத்தான போர் தொடங்கப்பட்டடு உள்ளது - அருண் ஜெட்லி

* உலகப்பொருளாதாரம் நிலையாக இல்லை - அருண் ஜெட்லி

* நான்காவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

=============================================================

* 2017-18 ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்து வருகிறார்.

* பட்ஜெட் தாக்கல் செய்ய காங்கிரஸ் எதிர்ப்பு, எம்.பி. அகமது மறைவை அடுத்து அவையை ஒத்திவைக்க கோரிக்கை.

* தொடங்கியது நாடாளுமன்ற கூட்டம், நேற்று மரணமடைந்த கேரள எம்.பி. இ.அகமது மறைவுக்கு உறுப்பினர்கள் இரங்கல் அஞ்சலி.
 
* 2017-18-ஆம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட் 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.