திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (16:47 IST)

த்ரிஷாவின் ‘மோகினி’ டிரைலரை வெளியிடும் கார்த்தி

த்ரிஷா நடித்துள்ள ‘மோகினி’ படத்தின் டிரைலரை, இன்று மாலை கார்த்தி வெளியிடுகிறார்.
ஆர்.மாதேஷ் இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மோகினி’. ஹாரர் படமாக உருவாகியுள்ள இதில், ஜாக்கி  பாக்னனி, சுரேஷ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விவேக் -  மெர்வின் இசையமைத்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் இசை, ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர்,  இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கார்த்தி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘மோகினி’ டிரைலரை  வெளியிடுகிறார். இந்தப் படத்தின் இசையை, பிரபல ஆடியோ நிறுவனமான திங்க் மியூஸிக் வாங்கியுள்ளது. கடந்த 15  வருடங்களாக ஹீரோயினாக இருக்கும் த்ரிஷாவுக்கு, இந்த வருடம் எந்தப் படமும் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.