கன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி! (வீடியோ இணைப்பு)


Caston| Last Modified திங்கள், 6 ஜூன் 2016 (16:55 IST)
கவர்ச்சி நடிகை சோபியா ஹயாத் திடீரென தான் கன்னியஸ்திரியாக மாறியதாக அறிவித்துள்ளார். இது பாலிவுட் ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
இங்கிலாந்தை சார்ந்த சோபியா ஹயாத் பாலிவுட் படங்களில் நடிக்க மும்பை வந்தார். கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து வெளியிடும் அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை.
 
இதனால் தனது மார்பகங்களை பெரிதாக்க சிலிகான் இம்பிளான்ட்டை பொருத்தி தனது மார்பகங்களை கவர்ச்சியாக காட்டி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் சோபியா ஹயத். ரசிகர்களை கவர்வதற்காக மிகவும் குறைவான ஆடையுடன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்திய சோபியா தற்போது கன்னியாஸ்திரியாக மாறிவிட்டார்.
 
 

நன்றி: FilmiBeat
 
கவர்ச்சியில் ஊறிப்போய் இருந்த சோபியா தற்போது கன்னியாஸ்திரியாக மாறி இருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சோபியா ஹயாத், முஸ்லீமாக பிறந்த தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கன்னியாஸ்திரியாக மாறிவிட்டதாக கூறினார். இனி ஆன்மீக பாதையில் தான் தனது வாழ்க்கைப் பயணம் என்றும் கூறிய அவர், தனது மார்பகங்களை பெரிதாக்க பயன்படுத்திய சிலிகான் இம்பிளான்டை அகற்றிவிட்டதாகவும் அறிவித்துள்ளார்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :