வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2018 (08:47 IST)

நடிகை தமன்னா மீது செருப்பு வீசிய பொறியியல் பட்டதாரி

ஹைத்ராபாத் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகை தமன்னா மீது வாலிபர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பையா, அயன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்திலும் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி என்று பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில்  ஹைத்ராபாத்தில் உள்ள ஹிமாயத்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்படயிருந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு  தமன்னா சென்றிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்த ரசிகர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை  எறிந்துள்ளார்.
ஆனால் அது நகைக்கடை ஊழியர் மீது விழுந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, அவரது பெயர் கரிமுல்லா (31) என்றும் பொறியியல் பட்டதாரி என்றும் கூறியுள்ளனர். மேலும், தான் தமன்னாவின் தீவிர ரசிகர் என்றும் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் சரியில்லாததால் விரக்தியில், தமன்னா மீது செருப்பு வீசியதாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.