ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2020 (13:48 IST)

பிக்பாஸ் தொகுப்பாளராகும் சமந்தா - அதிரடி அறிவிப்பு!

முதன் முதலாக  இந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ், தெலுங்கு , மராத்தி, கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு இந்தியா முழுக்க பரவி வருகிறது. அந்தவகையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ்4 நிகழ்ச்சியை பிரபல நடிகரான நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார்.

இதற்கிடையில் நாகார்ஜூனா 'வைல்ட் டாக்' என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லவிருப்பதால் வார வாரம் இங்கு வந்து செல்லமுடியாது என்று கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துள்ளார்.

எனவே சில வாரங்கள் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நாகர்ஜூனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். இதே போன்று போன சீசனில் கூட நாகார்ஜுனாவுக்கு பதில் சில வராம்  நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.