செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (11:14 IST)

கஸ்தூரிராஜா இயக்கத்தில் அகோரியாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர்

இயக்குநர் கஸ்தூரிராஜா கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப்பின் இயக்கும் தமிழ்ப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பை அகோரியாக நடிக்க வைத்துள்ளார்.
ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் இந்த படத்திற்கு 'பாண்டி முனி' என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
 
இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும்  நடிக்கிறார். மற்றும் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறுகையில், இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும்  பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் ‘பாண்டி முனி’. அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70  வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படமாக உருவாக்கி இருக்கிறேன். மேலும் இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன்  உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி என்றார்.