வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:17 IST)

ஒண்டிக்கட்ட மனுஷனுக்கு இவ்ளோவ் சொத்தா..? வியப்பூட்டும் சல்மான் கானின் வருட வருமானம்!

பாலிவுட் சினிமாவின் மிகப்பெரும் ஆளுமை கொண்ட நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். வெற்றி ஏற்றவாறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வரும் சல்மான் கானிற்கு தற்ப்போது 54 வயது ஆகிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் குடும்ப வாழ்க்கை குறித்து சற்றும் யோசிக்காமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது , படங்களை தயாரிப்பது என பல துறைகளில் தனது திறமையின் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்.

சல்மான் ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக வருமானம் பார்ப்பதாக தகவல்கள் கூறுகிறது. இதில் அவர் நடிக்கும் ஒரு படத்திற்கு மட்டும் ரூ .80 கோடி சம்பளமாக வாங்குகிறாராம். மேலும், இவர் வைத்திருக்கும் சொகுசு காரின் விலை சுமார் 10 கோடிக்கும் அதிகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு சொத்தை ஆண்டு அனுபவிக்க பொண்டாட்டி,  பிள்ளைகள் என யாரும் இல்லை இதெல்லாம் இந்த மனுஷன் என்ன தான் செய்வாரோ....?