இந்தியா திரும்பிய ரன்வீர்-தீபிகா படுகோனே ஜோடிக்கு உற்சாக வரவேற்பு

ranveer
Last Modified ஞாயிறு, 18 நவம்பர் 2018 (16:05 IST)
இத்தாலியில் கடந்த வாரம் திருமணத்தை முடித்த ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி, இன்று மும்பை திரும்பியுள்ளனர்.
 
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான  தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.  இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர் . இதையடுத்து இத்தாலியில் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். 
 
15ம் தேதி  இத்தாலியின் லம்போடியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்தது. 
deep
இந்த திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள்  மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம விழா சிறப்பாக நிறைவடைந்ததால்  தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் தம்பதி இன்று இந்தியா திரும்பியுள்ளனர். மும்பை விமான நிலையத்தில் ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். புதுமண தம்பதியர் மும்பையில் உள்ள ரன்வீரின் புதிய இல்ல கிரஹபிரவேசத்துக்கு சென்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :