1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Ram Charan property value

வாரிசு பிள்ளை, ரூ. 1000 கோடிசொத்து, இத்தனை தொழில் செய்கிறாரா ராம் சரண்?

Ram Charan
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ஒரே மகனான ராம் சரண் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 
 
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான RRR படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்நிலையில் ராம் சரணின் சொத்து மதிப்பு குறித்த செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
நடிகரான இவருக்கு  ரூ.1300 கோடிக்கு மேல் சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. ஐதராபாத்தில்   ரூ.40 கோடி மதிப்புள்ள 25000 சதுர அடி கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ராம்சரண் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அதுமட்டும் அல்லாமல் தயாரிப்பு நிறுவனம், டுரூஜெட் என்கிற விமான நிறுவனம் 34 பிராண்டுகளின் விளம்பர தூதரகர் என நாள் ஒன்றிற்கு பலகோடி வருமானம் ஈட்டுகிறாராம். 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
நடிகராகிறார் லோகேஷ் கனகராஜ்.. யாருடைய படத்தில் தெரியுமா?