புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (11:52 IST)

உடல் எடை கூடியதால் படத்தில் இருந்து நீக்கம் : ராதிகா ஆப்தே வேதனை

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி போஸ்ட் போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்த இவர், உடல் எடை கூடியதால் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது: 
 
ஒரு இயக்குனர்  கதையை எனக்காகவே எழுதி இருப்பதாக கூறி நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்த கதையும்,  கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் அதில் நடிக்க ஆர்வமாக  இருந்தேன். ஆனால் படப்பிடிப்பு தொடங்க சில நாட்கள் இருந்த நிலையில் திடீரென்று என்னை படத்தில் இருந்து நீக்கி விட்டதாக கூறினார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், ஏன் என்னை படத்தில் இருந்து நீக்கினீர்ள் என காரணம் கேட்டேன். அதற்கு அவர்கள், எனக்கு உடல் எடை கூடியிருப்பதாக சொன்னார்கள். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் எடையை குறைத்துவிட்டு வருகிறேன் என்றேன். அதை அவர்கள் காது கொடுத்தே கேட்கவில்லை’’ என்று வேதனை தெரிவித்தார்.