"பிறந்தநாள் கேக் இத்தனை லட்சமா!" அளவுக்கு மீறிய காதல் - நெகிழ்ந்து போன பிரியங்கா!

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (11:29 IST)
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.


 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றி திரிந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பேமஸ் ஆவதே இவரது வேலையாக இருந்து வருகிறது. 
 
அண்மையில் கூட குடும்பத்துடன் புகைபிடிக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானார். மேலு அவரது ரசிகர்கள், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நீங்கள் இப்படி புகைப்பிடிக்கலாமா? என்று கேட்டு விமர்சித்தனர். 
 
இந்நிலையில் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். கணவருடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரியங்கா சோப்ராவிற்கு நிக் ஜோன்ஸ் நிறைய சர்ப்ரைஸ் கொடுத்து மகிழ்வித்தார். அதன் ஒரு பகுதியாக  4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட ஒரு கேக் வாங்கியிருந்தார் கணவர் நிக் ஜோனஸ்.


 
(Divine Delicacies Cakes) என்ற சாக்லேட்  நிறுவனம் செய்த இந்த (vanilla concoction) கேக்கின் விலை 5000 டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றரை லட்சம் ரூபாய் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி பிரம்மிப்படைய வைத்துள்ளது. பிறந்தநாளில் கணவர் வெளிப்படுத்திய அளவுக்கு மீறிய காதலால் பிரியங்கா சோப்ரா மிகுந்த மகிழ்ச்சியில் தென்பட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :