வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (13:59 IST)

என் சாவுக்கு அவர் தான் காரணம் - லெட்டர் எழுதி வச்ச பிரபல நடிகை!

இந்தி , தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை பாயல் கோஷ். சர்ச்சைக்குரிய நடிகையான இவர் , பாலியல் புகார், விமர்சனம் என அவ்வப்போது ஏதேனும் பிரச்சனையில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். 
 
அப்படித்தான் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில் தற்போது திடீரென நான் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு இவங்க தான் காரணம் என யார் பெயரையும் குறிப்பிடாமல் யாரையோ எச்சரித்து கடிதம் எழுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.