விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முன்னணி நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் புகழின் தந்தை முருகன், உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
தனது தந்தையின் மறைவு குறித்து சமூக வலைதளத்தில் மிகுந்த மனவேதனையுடன் பதிவிட்டுள்ள புகழ், "அப்பா, என்னிடம் சொல்லாமல் எங்குமே போகமாட்டீர்களே... இப்படி சொல்லாமல் போய்விட்டீர்களே என் தெய்வமே!" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
புகழின் தந்தை மறைவுக்குச் சின்னத்திரை பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
புகழுக்கு, இந்த தனிப்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். புகழுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் மனவலிமை கிடைக்க பலரும் பிரார்த்தித்து வருகின்றனர்.
Edited by Mahendran
