திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (16:31 IST)

டிசம்பர் 9-ல் பேட்ட ஆடியோ - பொங்கல் ரிலிஸ் கன்பார்ம்

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
 

ரஜினி நடித்துள்ள மெகா பட்ஜெட் படமான 2.0 சமீபத்தில் ரிலீசாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அவரது அடுத்த படமான பேட்ட படம் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து தற்போது பேட்ட ஆடியோ ரிலிஸ் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. முதன்முதலாக ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின்முதல் சிங்கிள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை ரஜியினின் ஆஸ்தான பாடகரான எஸ் பி பாலசுப்ரமணியம் அணிருத்தோடு இணைந்து பாடியுள்ளார். பாடலாசியர் விவேக் பாடலை எழுதியுள்ளார்.

இதையடுத்து டிசம்பர் 7 ஆம் தேதி இரண்டாவது சிங்கிள் பாடலும் டிசம்பர் 9 ஆம் தேதி படத்தின் மற்ற பாடல்கள் வெளியீடும் நடைபெற இருக்கிறது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பேட்ட படம் 2019 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கிறது.