வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (15:12 IST)

விவாகரத்து பெற்று... திருமணம் ஆகாமல் கர்ப்பமான அனுராக் காஷ்யப்பின் எக்ஸ் வொய்ஃப்!

நயன்தாரா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனுராக் காஷ்யப் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்தியில் பலவேறு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தமிழில் முதல் என்ட்ரியே வெறித்தனமாக இருந்தது. 
 
இவர் கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகையான கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பிறகு சில வருடங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து கலக்கி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ்பெர்க் என்பவரை காதலித்து வந்தார்.இருவரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் தீயாக பரவியது. 
 

 
இந்தநிலையில் தற்போது இதுகுறித்து பேட்டியளித்துள்ள கல்கி... ஆம் நான் கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் அனுராக் காஷ்யப்பை விவாகரத்து செய்தது குறித்து பேசிய அவர், தனக்கு மூத்தவராக இருந்த அனுராக்கை திருமணம் செய்துகொண்டபோது தனக்கு 25 வயதுதான் அந்த நேரத்தில் அவர் வாழ்க்கையிலிருந்து வேறுபட்ட விஷயங்களை விரும்பினார் மேலும் அவர் ஒரே பக்கத்தில் என்று கூறினார். 
 
இருந்தாலும், கல்கி மற்றும் அனுராக் இன்னும் நல்ல நண்பர்கள் தான்.  கல்கி இப்போது தனது முதல் குழந்தையை தனது காதலன் கை ஹெர்ஷ்பெர்க்குடன் பெறப்போகிறார். அதேபோல் அனுராக்,  சுப்ரா ஷெட்டியுடன் உறவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.