1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. Dhanush 50 Raayan movie release plan june 7th

மீண்டும் தள்ளிப் போகும் தனுஷின் ராயன் திரைப்படம்… ரிலீஸ் தேதி இதுவா?

தனுஷ் 50
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் கதாபாத்திர அறிமுகங்களை வெளியிட்டனர். இந்த படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் காரணமாக தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரஜினி& லோகேஷ் இணையும் ‘தலைவர் 171’ படம் இந்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?